காங்கேசன்துறை இரவு தபால் ரயில் சேவை ஆரம்பம்!
கொழும்பு கோட்டை, காங்கேசன்துறைக்கிடையிலான இரவு தபால் ரயில் சேவை 31:01:2025 ஆம் திகதி முதல் மீண்டும் ரயில்வே திணைக்களம் ஆரம்பித்துள்ளது.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இரவு 8.00 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், மறுநாள் அதிகாலை 4.35 மணிக்கு காங்கேசன்துறை ரயில் நிலையத்தை வந்தடையும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து இரவு 8.00 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், மறுநாள் அதிகாலை 4.40 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும்.