தண்டனைக்கு பயந்து அனைவரும் ஒன்றுபடுகின்றனர் – யாழ். வல்வெட்டித்துறையில் அனுரகுமார.
வங்கிகளை உடைத்தவர்கள், ஆஸ்திரேலியாவில் வெள்ளையர்களை ஏமாற்றியவர்கள், எரிபொருளில் மோசடி செய்தவர்கள் என அனைவரும் தற்போது ஒன்றிணைந்து தங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணைகள் மற்றும் தண்டனைகளை நிறுத்த முயல்வதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நேற்று (31) யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் தெரிவித்தார்.
யார் இணைந்தாலும் ஊழல்வாதிகளைத் தண்டிப்பதை நிறுத்தப் போவதில்லை என்று கூறிய ஜனாதிபதி, மேல்மட்டத்தில் இருப்பவர்கள் இணைந்தாலும், கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் அரசாங்கத்துடன் இருப்பதாகவும் கூறினார்.
மக்கள் அரசாங்கத்துடன் இருக்கும் வரை இந்த கூட்டணிகள் வெற்றிபெறாது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.