அவுஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 242 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 242 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 6-ஆம் திகதி முதல் காலியில் ஆரம்பமாகவுள்ளது.
அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 654 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இலங்கை அணி முதல் இன்னிங்சில் 165 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது.
அவுஸ்திரேலிய தரப்பில் மேத்யூ குனிமேன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நாதன் லயன் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனால் இலங்கை அணி 489 ஓட்டங்கள் பின்தங்கி ஃபாலோ ஆன் விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.
இரண்டாவது இன்னிங்சில் 55 ஓவர்கள் நீடிக்க முடியாமல் போன நிலையில், நான்காம் நாள் ஆட்டத்திலும் இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.
ஆனால் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 247 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
தினேஷ் சந்திமால் 63 ஓட்டங்களும், குசல் மெண்டிஸ் 10 ஓட்டங்களும் எடுத்தனர்.
மிடில் ஆர்டரில் 5 பேட்ஸ்மேன்களுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தாலும், பேட்ஸ்மேன்கள் யாரும் பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. இறுதியில் ஜெப்ரி வாண்டர்சே 53 ஓட்டங்கள் எடுத்தார்.
இலங்கை அணியில் 5 வீரர்களால் 10 ஓட்டங்கள் கூட தாண்ட முடியவில்லை.
அவுஸ்திரேலியா தரப்பில் மேத்யூ குன்ஹைமன், நாதன் லயன் ஜோடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது. மிட்செல் ஸ்டார்க், டாட் மர்பி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.