மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
மறைந்த தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
அவரது புகழுடல் வைக்கப்பட்டுள்ள மாவிட்டப்புரம் இல்லத்தில் இன்று காலை 8.00 மணியளவில் இறுதிக் கிரியைகள் ஆரம்பமாகியுள்ளதுடன், 10.00 மணியளவில் அஞ்சலி உறைகள் இடம்பெறவுள்ளன.
அதனை தொடர்ந்து மாவிட்டப்புரம் இந்து மயானத்தில் மாவை சேனாதிராஜாவின் புகழுடல் தகனம் செய்யப்படவுள்ளது.
மறைந்த மாவை சேனாதிராஜாவின் புகழுடலுக்கு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.