தேசமான்ய கென் பாலேந்திரா காலமானார்.

ஜோன் கீல்ஸ் குழுமத்தின் முதலாவது இலங்கைத் தலைவரான தேசமான்ய கந்தையா கென் பாலேந்திரா காலமானார்.

தமது 84ஆவது வயதில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.

கென் பாலேந்திரா இந்த நாட்டின் வணிக உலகில் ஒரு மைல்கல் என்று விவரிக்கக்கூடிய ஒரு வணிகத் தலைவர் ஆவார்.

ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தலைவராக இருந்த காலத்தில், கென் பாலேந்திரா அதன் அனைத்து கட்டுப்பாட்டு நிறுவனங்களின் தலைவராகவும் பணியாற்றினார்.

அத்துடன் பாலேந்திரா சிலோன் டொபாகோ கம்பெனி, பிரெண்டிக்ஸ், யூனியன் அஷ்யூரன்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களில் தலைவர் மற்றும் இயக்குநர் பதவிகளை வகித்துள்ளதுடன், இலங்கை வர்த்தக சபையின் முன்னாள் தலைவராகவும் (1998 – 2000) கடமையாற்றியுள்ளார்.

யாழ்ப்பாணம் – இணுவிலில் பிறந்த கென் பாலேந்திரா, கொள்ளுப்பிட்டி பகுதியில் வசித்து வந்ததுடன், கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவராவார்.

கென் பாலேந்திரா தனது பாடசாலை நாட்களில் ரக்பி வீரராகவும் திறமைகளை வௌிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.