தமிழகத்தில் பயங்கரவாதிகள் இருவர் கைது

தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு முக்கிய நபர்களை தேசியப் புலனாய்வு முகவை கைது செய்துள்ளது.

முன்னதாக, சென்னை, திருவாரூர் போன்ற ஆறு இடங்களில் என்.ஐ.ஏ எனப்படும் தேசியப் புலனாய்வு முகவையைச் சேர்ந்த அதிகாரிகள் திங்கட்கிழமை (பிப்ரவரி 3ஆம் தேதி) அதிரடி சோதனை நடத்தினர்.

தமிழகத்தில், தடை செய்யப்பட்டுள்ள ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆட்சேர்ப்பு நடப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு முகவை அதிகாரிகள், சென்னை, திருவாரூர் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

சமீபத்தில்தான் தேசியப் புலனாய்வு முகவை அதிகாரிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி முடிந்துள்ள நிலையில், மீண்டும் தற்பொழுது அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபோல் மன்னார்குடியின் ஆசாத் தெருவில் உள்ள பாபா பக்ருதீன் வீட்டிலும் முகவையின் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

அண்மையில், சென்னை புரசைவாக்கத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராக இருக்கும் அல்பாசிக் என்ற முக்கிய நபரை முகவையைச் சேர்ந்தவர்கள் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அல்பாசிக், மயிலாடுதுறை அருகே திருமுல்லைவாசலைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இவருக்கு தொடர்புடையவர்கள் வீடுகளிலும் முகவை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.