கென்யாவில் 10 ஆயிரம் கிலோ எடை கொண்ட யானை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது!

கென்யாவில் அதிக எடை கொண்ட யானை ஒன்று கண்டறியப்பட்டு உள்ளது. இதன் எடை 10 ஆயிரம் கிலோ ஆகும். உலகில் 50 ஆயிரத்திற்கும் யானைகள் உள்ளன. அவற்றில் 90 % அதிகமான யானைகள் ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ளன. பொதுவாக ஆசிய யானைகளை காட்டிலும், ஆப்ரிக்க யானைகள் உருவத்திலும் எடையிலும் மிகப்பெரியவையாக உள்ளன.

ஆசிய யானைகள் அதிகபட்சமாக 4500 கிலோ எடை கொண்டதாக இருக்கும்; ஆனால் ஆப்பிரிக்க யானைகள் 6800 கிலோ எடை வரை இருக்கும் என கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர்.ஆனால் ஒரு சில யானைகள், சராசரியைக் காட்டிலும் அதிக எடையும் உயரமும் கொண்டவையாக இருக்கும் என்பது அவ்வப்போது நிரூபணம் ஆகிறது.

கென்யாவில் இப்போது புதிய வரலாறு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது. கென்யா வரலாற்றில் அதிக எடை உள்ள யானை ஒன்று கண்டறியப்பட்டு உள்ளது. சோலியோ வனப்பகுதியில் கண்டறியப்பட்ட இந்த யானையின் எடை 10 ஆயிரம் கிலோவாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனையடுத்து இந்த யானையை பார்க்க சுற்றுலா பயணிகள் மத்தியில் ஆர்வம் காட்டுகின்றனர்.

இதற்கு முன்னர், அங்கோலா வனப்பகுதியில் அதிக எடை உள்ள யானை ஒன்று கண்டறியப்பட்டது. இதன் எடை 19,886 கிலோவாக இருந்தது. அந்த யானை 13 அடி உயரத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.