இந்த முறை சுதந்திர தினத்தில் சிங்கம் இல்லை!
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நேற்று நடைபெற்ற தேசிய சுதந்திர தின விழாவில், வழக்கமாக அணிவகுப்பின் முன்னால் செல்லும் சிங்க உருவம் இந்த முறை கொண்டு செல்லப்படவில்லை.
முன்னதாக ஒவ்வொரு சுதந்திர தின விழாவிலும் இராணுவத்தினர் தேசியக் கொடிகளை ஏந்தி அணிவகுத்துச் செல்வதற்கு முன் இந்த சிங்க உருவம் செல்வது வழக்கம்.
ஆனால் இந்த முறை அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படாதது குறித்து சமூக வலைதளங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.