யுனைடெட் பெட்ரோலியம் இலங்கை விட்டு வெளியேறுகிறது.
நாட்டில் எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட ஆஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம் இலங்கையை விட்டு வெளியேற தயாராகி வருகிறது.
அதன்படி, அதன் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.
இந்நிறுவனம் நாட்டில் செயல்பட்டது ஒரு வருடத்திற்கும் குறைவான காலமே.
நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அனுப்பிய கடிதத்தில், நிறுவனத்தின் கட்டுப்பாட்டை மீறிய எதிர்பாராத சூழ்நிலைகளால் இந்த முடிவை எடுக்க வேண்டி நேரிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, அடுத்த மாத முற்பகுதியில் இருந்து ஊழியர்களின் ஒப்பந்தங்கள் முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளன.