சீனா மற்றும் ஹாங்காங்கிலிருந்து வரும் பார்சல்களை அமெரிக்க தபால் சேவை நிறுத்திவைப்பு!
சீனா மற்றும் ஹாங்காங்கிலிருந்து வரும் பார்சல்களை அமெரிக்க தபால் சேவை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், அந்த நாடுகளில் இருந்து வரும் கடிதங்களுக்கு இது பொருந்தாது. இந்த முடிவுக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் கூடுதல் 10% வரி விதித்த பிறகு இது அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பதிலளிக்கும் வகையில், சில அமெரிக்க இறக்குமதிகளுக்கு தானும் வரிகளைச் செயல்படுத்துவதாக சீனா அறிவித்துள்ளது.