““Shame On You”” என சபாநாயகரை நோக்கி விரல் நீட்டி கத்திய அர்ச்சுனா .! (Video)
நாடாளுமன்ற உறுப்பினர் (மருத்துவர்) ராமநாதன் அர்ச்சுனா சமீபத்தில் அனுராதபுரம் பொலிஸாரால் வாகனப் பிரச்சினை தொடர்பாக கைது செய்யப்பட்டது குறித்து நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை பிரச்சினை எழுப்பினார்.
அங்கு மிகவும் உணர்ச்சிவசமாக நடந்து கொண்ட அவர், சிறப்புரிமை பிரச்சினையை மீறி வேறு விடயங்களை எழுப்பினார். சபாநாயகர் பலமுறை எழுத்துப்பூர்வமாக கொடுக்கப்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் மட்டும் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு எச்சரித்தும் அவர் அதற்கு கீழ்ப்படியாமல் மிகவும் உணர்ச்சிவசமாக கருத்துக்களைத் தெரிவித்தார்.
அப்போது அவர் ““Shame On You”… இந்த நாடாளுமன்றத்திற்கு வெட்கம்” என்று ஒட்டுமொத்த நாடாளுமன்றத்தையும் சபாநாயகரையும் நோக்கி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
அதற்கு எதிராக மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் கருத்து தெரிவித்தனர். சபாநாயகர் அந்த நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்தை ஹன்சார்ட் அறிக்கையிலிருந்து நீக்குமாறு உத்தரவிட்டார்.