லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கு: மீண்டும் விசாரணை, மீண்ம் எடுத்துக் கொள்ளப்படும் – ஹரினி உறுதி.
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2025/02/IMG-20250207-WA0013.jpg)
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பாக சந்தேக நபர்களுக்கு எதிராக தேவைப்பட்டால் அரசு மீண்டும் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யும் என்று பிரதமர் ஹரினி அமரசூரியா கூறுகிறார்.
தேவைப்பட்டால் அரசு புதிய விசாரணையைத் தொடங்குவது குறித்தும் பரிசீலிக்கும் என்றும் இன்று நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு கூறினார்.
“லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும். அதுதான் எங்கள் நிலைப்பாடு. எதிர்காலத்திலும் அதுதான் நிலைப்பாடாக இருக்கும். லசந்த விக்ரமதுங்கவின் மகள் எழுப்பிய விடயங்களையும் அவரது வேதனையையும் நாங்கள் நன்றாகப் புரிந்து கொள்கிறோம். நீதியும் நியாயமும் கிடைக்கும் என்று நாங்கள் அவருக்கு உறுதியளிக்கிறோம். சட்டத்தின் சரியான நடைமுறைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க நாங்கள் எதிர்பார்க்கிறோம். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதுதான் அரசின் கருத்து,” என்று ஹரினி கூறினார்.