இலோன் மஸ்க்குக்கு அரசாங்கத்தின் கட்டணச் செயல்முறையை அறிய தடை

அமெரிக்க அரசாங்கச் செயல்திறன் பிரிவுத் தலைவர் இலோன் மஸ்க் (Elon Musk), அந்நாட்டுக் கருவூலத் துறையின் கட்டணச் செயல்முறைத் தகவல்களைப் பெறுவதற்கு நீதிமன்றம் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலகின் ஆகப் பெரிய செல்வந்தரான மஸ்க் அரசாங்கத்தின் முக்கியக் கட்டணச் செயல்முறைகளில் மாற்றங்கள் ஏதும் செய்யவில்லை என்பதை நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் (Scott Bessent) தெளிவுபடுத்தினார்.
ஆண்டுதோறும் சமூகப் பாதுகாப்பு, மருத்துவப் பராமரிப்பு போன்றவற்றுக்கு டிரில்லியன் கணக்கான டாலர் கட்டணங்களைக் கையாளும் கட்டணக் கட்டமைப்பை அணுகுவதற்குத் திரு மஸ்க்கின் பிரிவுக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது.
சமூகப் பாதுகாப்புக் கட்டமைப்புகள் அதிகமாக அரசாங்க நிதியைப் பயன்படுத்துவதாய்த் திரு மஸ்க் குறைகூறியிருந்தார்.
Tesla நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மஸ்க்கின் செயல் தனிப்பட்ட தகவல்களுக்கு மிரட்டல் விடுப்பதாய் மத்திய ஊழியர்களும் வேலையிலிருந்து ஓய்வுபெற்றோரும் கூறுகின்றனர்.
அதனை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது.