மின் தடை காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் நோயாளர்கள் கடும் பாதிப்பு.
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2025/02/District-General-Hospital-Kilinochchi-333.jpg)
மின்தடையால் கிளிநொச்சி வைத்தியசாலை சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நோயாளர்கள் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின் தடை காரணமாக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் மின் தடை ஏற்பட்டுள்ளது. மின்பிறப்பாக்கியும் இயங்காத நிலையில் பல்வேறு சிகிச்சைப் பிரிவுகள் பாதிக்கப்பட்ள்ளன.
நோயாளர் விடுதி உள்ளிட்ட சிகிச்சைக்காக தங்க வைக்கப்பட்டுள்ள நோயாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக கொண்டு வரப்பட்ட மின்பிறப்பாக்கியும் பொருத்தப்படாத நிலையில் வைத்தியசாலையின் பல்வேறு சேவைகள் தடைப்பட்டுள்ளன.
இவ்விடயம் தொடர்பில் பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.