கொட்டாஞ்சேனையில் ஒருவர் சுட்டுக்கொலை.
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2025/02/IMG-20250211-WA0016.jpg)
நேற்று (10.02)இரவு 7.30 மணியளவில் கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவின் பெனடிக் அவென்யூவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்களில் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 43 வயது ஜம்பட்டா வீதியைச் சேர்ந்தவர் ஆவார்.
இந்த துப்பாக்கிச் சூடுக்கு T 56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக தற்போதைய விசாரணையில் தெரிய வந்துள்ளதுடன், சந்தேக நபர்களை கைது செய்ய 4 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.