பிரபல தொழிலதிபரை கொலை செய்த பேரன்.

ரூ.100 கோடிக்கும் மேல் நன்கொடையாக வழங்கிய பிரபல தொழிலதிபரை, அவரது பேரன் சொத்து தகராறு காரணமாக கொடூரமாக கொலை செய்துள்ளார்.

ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ஜனார்தன ராவ் (86). அவருக்கு கிட்டத்தட்ட ரூ.500 கோடிக்கும் அதிகமாக சொத்துகள் உள்ளன.

பல்வேறு மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை நிலையம், இதய நோய் சிகிச்சை நிலையங்கள் அமைக்க நன்கொடைகளை வாரி வழங்கி உள்ளார்.

ஜனார்தன ராவுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு பிறந்த ஸ்ரீகிருஷ்ணாவை தனது நிறுவனத்தின் இயக்குநராக நியமனம் செய்துள்ளார். இதனால் மூத்த மகள், இளைய மகள் குடும்பத்தினருக்கு இடையே பிரச்சினை எழுந்தது.

இந்த சூழலில் கடந்த 6ஆம் தேதி இரண்டாவது மகள் சரோஜினி தேவி, தனது மகன் கீர்த்தி தேஜ் (28) உடன், தந்தையின் பஞ்சகுட்டா வீட்டுக்கு சென்றார்.

அங்கு தாத்தா ஜனார்தன ராவும், பேரன் கீர்த்தி தேஜும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது நிறுவனத்தின் இயக்குநராக ஸ்ரீ கிருஷ்ணா நியமிக்கப்பட்டது, சொத்துகளை பிரிப்பது தொடர்பாக தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

வாக்குவாதம் முற்றி ஆத்திரம் அடைந்த பேரன் கீர்த்தி தேஜ், கத்தியால் தாத்தா ஜனார்தன ராவை கொடூரமாக தாக்கினார். 73 இடங்களில் கத்திக் குத்தால் காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கடந்த 8ஆம் தேதி கீர்த்தி தேஜை கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.