அமெரிக்காவில் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்று விமான விபத்து : ஒருவர் மரணம்

அமெரிக்காவின் அரிஸோனா (Arizona) மாநிலத்தில் தனியார் விமானமொன்று மற்றொரு விமானத்துடன் மோதியதில் ஒருவர் இறந்ததாக , விமானம் Scottsdale விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்து நேர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீட்புப் பணிகள் நடைபெறுகின்றன.

உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.40 மணி வாக்கில் விபத்து ஏற்பட்டது.

விமான நிலையத்தில் தரையிறங்கிய தனியார் விமானம் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்று தனியார் வளாகத்தில் நின்றுகொண்டிருந்த மற்றொரு விமானத்தின்மீது மோதியது.

சம்பவத்தையடுத்து மூடப்பட்ட ஓடுபாதை இன்னும் சிறிது காலம் அப்படியே மூடப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க ஆகாயப் போக்குவரத்து மிகவும் உன்னிப்பாக கண்காணிக்கப்படும் நேரத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்க வரலாற்றில் கடந்த இரண்டு வாரங்களில் அடுத்தடுத்து நேர்ந்துள்ள 3 மோசமான ஆகாயப் போக்குவரத்து விபத்துகளில் 84 பேர் இறந்துள்ளனர்.

விசாரணைகள் தொடர்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.