கொழும்பு ஜிந்துபிட்டி அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலய தைப்பூசத் திருவிழா
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2025/02/IMG-20250212-WA0014.jpg)
அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்திலிருந்து பால்குடங்களை ஏந்தியபடி 250 பக்தர்கள் பாத ஊர்வலமாகப் நேற்று (11) புறப்பட்டனர்.
பக்தர்கள் முன்கூட்டியே ஆலயத்திற்கு வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்தனர்.
கொழும்பு ஜிந்துபிட்டி வீதியிலிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்திற்குச் சுமார் 200 மீட்டர் தூரம் பக்தர்கள் நடந்து செல்கின்றனர்.
காலை 9 மணிக்குப் பாலாபிஷேகமும் முற்பகல் 11 மணிக்கு அலங்கார பூசையும் நடைபெற்றது.
பகல் ஒரு மணிக்கு 1,000 பக்தர்களுக்கு அன்னதானமும் , மாலை 6.30க்குத் தங்க ரத ஊர்வலமும் நடந்தேறின.