மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி.

நுவரெலியா கண்டி பிரதான சாலையில் பம்பரக்கலை பகுதியில் இயங்கி வந்த மசாஜ் நிலையத்தை சுற்றி வளைத்து நான்கு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்களை 11ம் திகதி மாலை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக நுவரெலியா குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த பண்டார தெரிவித்தார்.
இந்த இடத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் பணம் கொடுத்து பெண்களை விற்பனை செய்யும் வியாபாரம் நடந்து வந்துள்ளதாகவும், இரகசிய பொலிஸ் அதிகாரியை பயன்படுத்தி அந்த இடத்தில் விபச்சார வியாபாரம் நடந்து வந்தது உறுதி செய்யப்பட்டதால் நான்கு பெண்கள் மற்றும் மசாஜ் நிலையத்தின் முகாமையாளர், உதவி முகாமையாளர் கைது செய்யப்பட்டதாகவும் நிலையப் பொறுப்பதிகாரி கூறினார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இரத்தினபுரி, வெலிமடை, காலி, கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், சந்தேக நபர்கள் 21-34 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், இந்த வியாபாரத்தை நடத்திய இரண்டு சந்தேக நபர்களும் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் ரெய்டு செய்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.