இன்று உலக வானொலி தினம்.
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2025/02/World-Radio-Day.jpg)
பிப்ரவரி 13 – உலக வானொலி தினம்.
2012ஆம் ஆண்டு முதன்முதலில் இந்த நாள் அனுசரிக்கப்பட்டது.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சமூக முன்னேற்றத்தை ஊக்குவிக்கவும் வானொலி ஆற்றிவரும் பங்கினை எடுத்துக்கூற இந்த நாள் அறிமுகம் கண்டது.
அந்த நோக்கத்தை இந்த ஆண்டுக்கான கருப்பொருள் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள் “வானொலியும் பருவநிலை மாற்றமும்”.
பருவநிலை மாற்றம் காரணமாக உலகெங்கிலும் அதிக அளவில் நிகழும் தீவிர வானிலை நிகழ்வுகள் குறித்த விரிவான, நம்பகமான செய்திகளை வழங்குதற்கான தேவை இருப்பதால் அக்கருப்பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக UNESCO அமைப்பு கூறியிருக்கிறது.
குறைந்த செலவில் அதிக மக்களைச் சென்றடையக்கூடிய ஆற்றல் வானொலிக்கு உள்ளது. அதனால் பருவநிலை மாற்றம் குறித்த அடிப்படைத் தகவல்களை மக்களுக்குக் கொண்டுசேர்க்க வானொலி முக்கியப் பங்கு வகிப்பதாக அமைப்பு சொன்னது.