காதலர் தினத்தை இணைந்து கொண்டாட முடியாது என்ற காதலி : கிணற்றில் குதித்து தற்கொலை செய்த காதலன்

கிளிநொச்சி புளியன்பொக்கனை முசிரம்பிட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்த இளைஞர் வீட்டில் மிகவும் மன வருத்தத்தில் இருந்ததாகவும், நேற்று மாலை தனது மகன் வீட்டில் இல்லாததால் தோட்டத்திலுள்ள கிணற்றை பரிசோதித்தபோது அதில் அவர் சடலமாக கண்டதாகவும் இறந்த இளைஞரின் பெற்றோர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இளைஞரின் மரணத்திற்கான சரியான காரணம் தெரியவராத நிலையில், காதல் உறவு காரணமாக இவ்வாறு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இறந்த இளைஞர் வேறொரு பெண்ணுடன் காதல் உறவில் இருந்ததாகவும், காதலர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்திற்கு செல்ல விரும்புவதாக காதலியிடம் கேட்டபோது அவள் அதை மறுத்து திட்டியதால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்ததாகவும் பெற்றோர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் முசிரம்பிட்டி பகுதியைச் சேர்ந்த சற்குணராசா பிரதீபன் (29) எனவும், மரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.