யோஷித மற்றும் டெய்சி பாட்டிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரஸ்ட் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.
2012 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் 800 லட்சத்திற்கும் அதிகமான ரூபாய் மதிப்புள்ள ரத்மலான சிரிமல் வத்த உயன மற்றும் தெஹிவளை பகுதிகளில் நிலம் மற்றும் சொத்துக்களை எவ்வாறு கையகப்படுத்தினார்கள் என்பதை வெளிப்படுத்தத் தவறியதற்காகவே இந்த பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.
இவ்வாறு பணம் சம்பாதித்தது எப்படி என்பதை வெளிப்படுத்தத் தவறியதன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்துள்ளதாகக் குற்றம் சாட்டி சட்டமா அதிபர் இந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக யோஷித ராஜபக்ஷ கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே , நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.