ஐக்கிய மக்கள் சக்தி (SJB) தனியாகப் போட்டியிட தயாராகிறது

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சி எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, வேட்பாளர் பட்டியலைத் தயாரிப்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் வேட்பு மனு குழுக்களை நியமித்துள்ளது.
இருப்பினும், ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல ஒன்றிணைந்து போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
ஆனால், அந்த பேச்சுவார்த்தைகளில் இறுதி உடன்பாடு எட்டப்படுவதற்கு முன்பே வேட்பு மனு குழுவை நியமித்தது குறிப்பிடத்தக்கது.