ஆயுதக் களஞ்சியத்திலிருந்து காணாமல் போன T56 துப்பாக்கியுடன் கடற்படை வீரர் கைது!

கடற்படை ஆயுதக் களஞ்சியத்திலிருந்து காணாமல் போன T56 துப்பாக்கியுடன் கடற்படை வீரர் ஒருவர் குளியாபிட்டிய, இலுக்கேன பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குளியாபிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகளின் உதவியுடன் கடற்படை தலைமையக அதிகாரிகள் குழு இன்று (16) அதிகாலை நடத்திய சுற்றிவளைப்பின் போது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவர் 2021 ஆம் ஆண்டில் கொழும்பு துறைமுகம், ரங்கல முகாமுடன் இணைக்கப்பட்டு ஆயுதக் களஞ்சியத்தின் பொறுப்பில் இருந்ததாகவும், அந்த நேரத்தில் தான் சம்பந்தப்பட்ட T56 துப்பாக்கி காணாமல் போயிருந்ததாகவும் கூறப்படுகிறது.
சந்தேக நபர் வெலிசரா கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடத்திய பின், மேலும் விசாரணைக்காக குளியாபிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளார்.