முன்னாள் எம்.பி.யும் மகனும் கைது.

சிலாபம் பகுதியில் ஒருவர் சட்டவிரோதமாக அசெம்பிள் செய்யப்பட்ட ஜீப் ரக வாகனத்தைப் பயன்படுத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
அதன்படி, 2025.02.18 அன்று மாலை, இந்த ஜீப் வாகனத்தின் உரிமையாளராகக் காட்டிக் கொண்ட நபரையும், அதை பயன்படுத்திய அவரது மகனையும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு அழைத்து வாக்குமூலம் பெற்ற பிறகு, சட்டவிரோதமாக பாகங்களை அசெம்பிள் செய்து போலியான இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தி வாகனத்தைப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் சிலாபம் பகுதியில் வசிக்கும் 63 வயதான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகர மற்றும் 31 வயதான அவரது மகன் ஆகும்.
கைது செய்யப்பட்டவர்கள் 2025.02.19 அன்று மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.