இலோன் மஸ்க்கின் ‘Grok 3’ AI வசதி வெளியீடு

இலோன் மஸ்க்கின் (Elon Musk) xAI நிறுவனம், ‘Grok 3’ எனும் தானியக்க உரையாடல் வசதியின் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது.
ChatGPT, DeepSeek போன்ற செயற்கை நுண்ணறிவு வசதிகள் இருக்கும் வேளையில் Grok 3 பிரபலமாகும் என்று மஸ்க் நம்பிக்கை கொண்டுள்ளார்.
உலகின் ஆகப் பெரிய பணக்காரர் மஸ்க். அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அவரிடம் மத்திய அரசாங்கத்தின் அமைப்புகளைச் சீரமைக்கும் பொறுப்பைத் தந்துள்ளார். இந்நிலையில் மஸ்க் ‘Grok 3’ வசதியை வெளியிட்டுள்ளார்.
சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட பதிப்பைவிட Grok 3க்கு 10 மடங்கு ஆற்றல் அதிகம் என்று மஸ்க் கூறியுள்ளார்.
செய்யும் தவறுகளைச் சொந்தமாகச் சரிசெய்யும் ஆற்றலை அது கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.