மீனகயா ரயிலில் மோதி 5 யானைகள் பலி! ரயில் தடம் புரள்வு.

இன்று (20) அதிகாலை மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற “மீனகயா” அதிவேக ரயில் கல்ஓயா பகுதியில் யானைகள் கூட்டத்தில் மோதியதால் மட்டக்களப்பு பாதையில் ரயில் போக்குவரத்து தடைபட்டது.
ரயில் யானைகள் கூட்டத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ரயில் தடம் புரண்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் ஐந்து காட்டு யானைகளும் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் மட்டக்களப்பு பாதையில் ரயில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பிலிருந்து கொழும்பு வரை தடையில்லாமல் இயக்கப்படவிருந்த புலத்திசி ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயிலை மீண்டும் தண்டவாளத்தில் ஏற்றி சீர் செய்யும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.