ஆண்களை விட பெண்கள் அதிகமாக இருக்கும் இந்திய மாநிலம் எது தெரியுமா?

ஆண்களை விட பெண்கள் அதிகமாக இருக்கும் இந்திய மாநிலம் எது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
எந்த மாநிலம்?
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்தியா ஒன்றாகும். அந்த வகையில் ஆண்களும் பெண்களும் இணைந்து ஒரு சமுதாயத்தை உருவாக்குகின்றனர்.
ஆனால், இந்தியாவில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையிலான மக்கள் தொகை விகிதங்கள் மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடுகின்றன.
2011-ம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கின்படி, பெண்கள் 48.46% ஆகவும், ஆண்கள் 51.54% ஆகவும் உள்ளனர்.
இதில், இந்திய மாநிலமான கேரளாவில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ளனர். டைம்ஸ்நவ் இந்தி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்த தகவல் தெரியவந்துள்ளது.
கேரள மாநிலமானது அதிக கல்வி அறிவு விகிதங்கள், சிறந்த சுகாதாரம் உள்ளிட்ட நல்ல விடயங்களுக்காக முன்னுதாரணமாக உள்ளது. கேரளாவில் 2001-2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பாலின விகிதத்தில் 26 புள்ளிகள் முன்னேற்றம் அடைந்துள்ளது.
அதாவது இங்கு, 1,000 ஆண்களுக்கு 1,084 பெண்கள் என்ற விகிதம் பதிவாகி உள்ளது. மேலும், 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கேரளாவின் மக்கள் தொகை 33,406,061 ஆக உள்ளது.
அதேபோல, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1037 பெண்கள் என பதிவாகியுள்ளது.
பெண்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கொடுக்கும் காரணங்களுக்கு கேரளா மாநிலம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது.