அனைத்து எம்.பி.க்களுக்கும் மீண்டும் பொலிஸ் பாதுகாப்பு…

அமைச்சர் பாதுகாப்பு பிரிவின் இரண்டு அதிகாரிகள் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்க பொலிஸ் தலைமையகம் முடிவு செய்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு சபாநாயகர் அறிவித்ததை அடுத்து இது செய்யப்படுகிறது.
சமீபத்தில் நடந்த பாதாள உலக நடவடிக்கைகள் குறித்து பரிசீலனை செய்த பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு பெறுவது அல்லது பெறாதது குறித்து எம்.பி.க்கள் முடிவு செய்யலாம்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, எம்.பி.க்களுக்கு சிறப்பு பாதுகாப்பு தேவையில்லை என்று கூறி, பாதுகாப்பு அதிகாரிகள் சாதாரண பணிகளுக்கு மாற்றப்பட்டனர்.