இன்று ஜெர்மனியில் பொதுத்தேர்தல்.

ஜெர்மனியில் இன்று பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.

மொத்தம் 60 மில்லியன் பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.

குடியேறிகள் விவகாரம் இம்முறை அதிக அக்கறைக்குரிய அம்சமாக விளங்குகிறது.

அரசியல்வாதிகள் குடியேறிகளை அனுமதிப்பதில் மேலும் கடுமையாக நடந்துகொள்ளவேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர்.

குடியேறிகள் விவகாரத்தில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்க வேட்பாளர்கள் வாக்குறுதியளித்துள்ளனர்.

அனுமதி மறுப்பதற்குச் சிலர் பரிந்துரை செய்கின்றனர்.

அனுமதி பெறும் குடியேறிகளின் எண்ணிக்கை சமாளிக்கக்கூடிய அளவில் இருப்பதை உறுதிசெய்யவிருப்பதாக ஜெர்மானியப் பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ் கூறியுள்ளார்.

சிரியாவில் பூசல் மூண்டதிலிருந்து ஆயிரக்கணக்கான சிரியா மக்கள் ஜெர்மனியில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

அவர்களைச் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பவேண்டும் என்ற கோரிக்கையைச் சில வேட்பாளர்கள் முன்வைக்கின்றனர்.

சிரியா மக்கள் ஜெர்மானிய சமூகத்தில் ஓர் அங்கத்தினர்.

அவர்களும் நாட்டிற்குப் பங்காற்றுவதாகக் கூறுகின்றனர் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள்.

நாளைய தேர்தல் முடிவுகளில் நாட்டின் தலைமைத்துவத்தோடு குடியேறிகளின் எதிர்காலமும் நிர்ணயிக்கப்படும்.

Leave A Reply

Your email address will not be published.