சல்மான் ருஷ்டியைத் தாக்கிய ஆடவர் – குற்றவாளி எனத் தீர்ப்பு.

பிரபல நாவலாசிரியர் சல்மான் ருஷ்டியைக் (Salman Rushdie) கத்தியால் பலமுறை குத்திய அமெரிக்கர் மீது கொண்டுவரப்பட்ட கொலைமுயற்சி குற்றச்சாட்டில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
நியூ ஜெர்சியைச் (New Jersey) சேர்ந்த 27 வயது ஹெய்டி மத்தார் 2022 ஆகஸ்ட் மாதம் நியூயார்க்கில் திரு ருஷ்டி மேடையில் பேசவிருந்தபோது பத்துக்கும் அதிகமான தடவை அவரைக் கத்தியால் குத்தினார்.
77 வயது திரு ருஷ்டிக்கு ஒரு கண்ணில் பார்வை பறிபோனது.
தாக்குதல் நடத்திய 27 வயது ஹெய்டி மத்தாருக்கு (Hadi Matar) 25 ஆண்டுவரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.