வவுனியாவில் மோட்டார் சைக்கிளுடன் கார் மோதி விபத்துக்குள்ளாகி முற்றாக எரிந்தன.

வவுனியா பூந்தோட்டம் வீதியில் மோட்டார் சைக்கிளுடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் காரும் மோட்டார் சைக்கிளும் முற்றாக தீப்பற்றி எரிந்ததுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் திங்கட்கிழமை வவுனியா – பூந்தோட்டம் வீதியில் இடம்பெற்றுள்ளது. வவுனியா நகர் பகுதியில் இருந்து பூந்தோட்டம் நோக்கிச் சென்ற காரும், பூந்தோட்டம் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய நிலையில் விபத்துக்குள்ளாகி இருக்கின்றது.
இதனை அடுத்து இரு வாகனங்களும் தீப்பற்றி எரிந்த நிலையில் அங்கு குழுமிய மக்களினால் தீயை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் அது சாத்தியப்படவில்லை.
இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் காயம் அடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு காரில் வந்தவர்கள் காப்பாற்றப்பட்டனர்.
இந்நிலையில் வவுனியா நகர சபையின் தீயணைப்பு பிரிவினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்த முயற்சித்த போதிலும் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் முழுமையாக எரிந்துள்ள நிலையில் காணப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா போலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.