ஜெர்மனியில் ஆளும் கட்சி தோல்வி : பிரதமராகப் பதவி ஏற்க இருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சி ஃபிரெட்ரிக் மெர்ஸ்

ஜெர்மனியின் தேசிய தேர்தலில் ஆளும் கட்சி தோல்வி அடைந்தது.

எதிர்க்கட்சிக் கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் பிரதமராகப் பொறுப்பேற்க இருக்கிறார்.

ஆனால் 69 வயது மெர்சின் தலைமையின்கீழ் செயல்பட இருக்கும் கூட்டணியில் வலதுசாரி கட்சியான ஏஎஃப்டியும் இடம்பெற உள்ளது.

அக்கட்சி தேர்தலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

ஏஎஃப்டி கட்சியுடன் மெர்ஸ் நீண்ட, சவால்மிக்க பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில், ஐரோப்பாவில் அமெரிக்காவின் ஆதிக்கத்தைக் குறைக்க செயல்பட இருப்பதாகத் மெர்ஸ் அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளிலேயே ஜெர்மனிதான் ஆகப் பெரிய பொருளியலைக் கொண்டுள்ளது.

தற்போது அந்நாட்டின் பொருளியல் பலவீனமாக உள்ளது.

ஜெர்மனியின் பொருளியலை மேம்படுத்தும் பொறுப்பு முதல்முறையாகப் பிரதமர் பதவி வகிக்க இருக்கும் மெர்சுக்கு உள்ளது.

மேலும், குடியேறிகள் தொடர்பாகவும் ஜெர்மானியர்களிடையே மாறுபட்ட கருத்து நிலவுகிறது.

குடியேறிகள் தொடர்பாக அந்நாட்டைச் சேர்ந்த பலரிடமிருந்து அதிருப்திக் குரல்கள் எழுந்துள்ளன.

இந்த விவகாரத்துக்குத் தீர்வு காண வேண்டிய அவசியம் மெர்சுக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கும் சீனா மற்றும் ரஷ்யாவின் நிலைப்பாட்டுக்கும் இடையே ஐரோப்பிய நாடுகள் சிக்கித் தவிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையையும் மெர்ஸ் சமாளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.