மகா கும்பமேளாவுக்காக பிரயாக்ராஜுக்குச் செல்ல முடியாததால் வீட்டு முற்றத்தில் 40 அடி ஆழ கிணறு தோண்டி கங்கை நீரை கொண்டு வந்த பெண்!

மகா கும்பமேளாவுக்காக பிரயாக்ராஜுக்குச் செல்ல முடியாததால் 57 வயது பெண் ஒருவர் தனது வீட்டு முற்றத்தில் 40 அடி ஆழ கிணறு தோண்டி கங்கை நீரை கொண்டு வந்துள்ளார்.

எங்கு நடந்தது?
இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் கடந்த மாதம் 13-ம் திகதி மகா கும்பமேளா தொடங்கி நடைபெற்று வருகிறது.

உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் மகா கும்பமேளாவுக்கு வருகை தருகின்றனர். இதுவரை 55 கோடிக்கும் அதிகமான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.

இந்திய மாநிலமான கர்நாடகா, உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள சிர்சியில் வசிப்பவர் கௌரி (57 வயது).

இவருக்கு பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் சென்று புனித நீராடுவதற்கு விருப்பம். ஆனால், பண நெருக்கடியால் இவரால் அங்கு செல்ல முடியவில்லை.

இதனால், தனது வீட்டின் பின்பக்கத்தில் 40 அடி ஆழத்தில் கிணறு தோண்டினார். இதன் மூலம் கங்கை நீரை தனது வீட்டிற்கே கொண்டு வந்ததாக அவர் நம்புகிறார். இந்த கிணற்று நீரை கங்கை நீராக கருதி மகா சிவராத்திரி நாளில் நீராடுவார் என்று கூறப்படுகிறது.

இவருடைய வாழ்க்கையே விவசாயத்தை மட்டும் தான் உள்ளது. இதனிடையே, வருமானம் இல்லாததால் கும்பமேளா செல்ல முடியவில்லை.

பின்னர், டிசம்பர் 15, 2024 அன்று யாருடைய உதவியும் இல்லாமல் கிணறு தோண்ட ஆரம்பித்து பிப்ரவரி 15, 2025க்குள் கிணற்றை கட்டி முடித்தார்.

இதில் தற்போது நீர் ஆதாரம் தோன்றியுள்ளதால் இதனை கங்கை நீர் என்று கருதுகிறார். இரண்டே மாதத்தில் கிணறு கட்டி முடித்ததால் பலரும் இவரை பாராட்டுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.