புதுக்குடியிருப்பு வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்ப பெண் பலி!

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான்-புதுக்குடியிருப்பு
வீதியில் இடம்பெற்ற விபத்தில் 30
வயது இளம் குடும்ப பெண் ஒருவர்
உயிரிழந்துள்ளார்.
நேற்றையதினம் கணவன், பிள்ளையுடன் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது குரங்கு
குறுக்கால் பாய்ந்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.காயமடைந்த தாயும் மகளும் வைத்தியசாலையில் அனுமதிப்படிருந்தனர்.
தாய்க்கு தலையில் சிறு காயம் ஏற்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்
உயிரிழந்துள்ளார்.