கணேமுல்ல சஞ்சீவ் கொலை தொடர்பாக மேலும் 20 பேரிடம் வாக்குமூலம் !

கணேமுல்ல சஞ்சீவ் கொலை தொடர்பாக மேலும் 20 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
இந்த கொலை தொடர்பாக இதுவரை 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த பிப்ரவரி 19ஆம் திகதி கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5ஆம் எண் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கணேமுல்ல சஞ்சீவ் என்கிற சஞ்சீவ குமார சமரரத்ன சுட்டுக் கொல்லப்பட்டார்.
துப்பாக்கிச் சூடு நடந்தபோது நீதிமன்ற அறையில் இருந்த சில சந்தேக நபர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
தற்போது துப்பாக்கிச் சூடு நடந்தபோது நீதிமன்றத்தில் இருந்த சிறப்பு அதிரடிப் படை உறுப்பினர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் உட்பட சுமார் 40 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.