பாதுகாப்பு அமைச்சர் பதவியை கோட்டாபய ராஜபக்ஷவிடம் கொடுங்கள்! – மனோஜ் கமகே. (Video)

அரசாங்க அமைச்சர்கள் கூறுவது போல், ராஜபக்ஷ குடும்பத்தினர்தான் இன்னும் நாட்டை ஆள்கிறார்கள் என்றால், அந்த பதவிகளில் தொடர்ந்து இருக்காமல் ராஜபக்ஷ குடும்பத்தினரிடமே ஒப்படைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக பேச்சாளர் வழக்கறிஞர் மனோஜ் கமகெ இன்று (25) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தை ஒரு மாதத்திற்கு கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அவர் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பார் என்றும் கமகெ கூறினார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஒரு முதிர்ச்சியான தலைவர் என்றும், பாதுகாப்பு செயலாளராக நாட்டின் தேசிய பாதுகாப்பை திறமையாக உறுதி செய்த தலைவர் என்றும் அவர் கூறினார்.

நடந்து வரும் கொலை சம்பவங்கள் ராஜபக்ஷ குடும்பத்தினரின் கணக்கில் சேர்க்கப்பட்டால், மக்கள் ஏன் மூன்றில் இரண்டு பங்கு அதிகாரத்தை வழங்கி திசைகாட்டி அரசாங்கத்தை தேர்ந்தெடுத்தார்கள் என்று மனோஜ் கமகெ கேள்வி எழுப்பினார்.

மக்கள் ராஜபக்ஷ குடும்பத்தினரை வீட்டிற்கு அனுப்பிவிட்டு மூன்றில் இரண்டு பங்கு அதிகாரத்தை வழங்கியிருக்கும் நிலையில், தொடர்ந்து முணுமுணுக்காமல் செயல்படுமாறு அவர் வலியுறுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.