செவ்வந்தி பற்றிய தகவல்.. சுற்றி வளைக்கப்பட்டபோது பெண்ணொருவர் காட்டுக்குள் ஓடினார்.. அவரைத் தேடும் பணி தீவிரமடைகிறது.. (Video)

புதுக்கடை நீதிமன்றத்தில் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் மூளையாக செயல்பட்டவர் என கூறப்படும் இஷாரா செவ்வந்தி தெபுவன, ரன்னகல தோட்டத்தில் உள்ள வீட்டில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பொலிஸ் குழுவினர் அந்த வீட்டை சுற்றி வளைத்து அங்கு இருந்த மூன்று பெண்களை கைது செய்துள்ளனர்.
இந்த நடவடிக்கைக்கு ராணுவம், சிறப்பு அதிரடிப் படை மற்றும் தெபுவன பொலிஸ் அதிகாரிகள் இணைந்து செயல்பட்டனர்.
மத்துகம மூத்த பொலிஸ் அத்தியட்சகர் உட்பட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று வீடு மற்றும் சுற்றுப்புற பகுதியை முழுமையாக ஆய்வு செய்தும் சந்தேகத்திற்குரிய எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.
அங்கு இருந்த சந்தேகத்திற்குரிய பெண் இரண்டு வாரங்களுக்கு முன்பு எம்பிலிபிட்டிய பகுதியில் இருந்து இந்த வீட்டிற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த பெண் குறித்து அப்பகுதி மக்கள் உன்னிப்பாக கண்காணித்து பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
24ஆம் திகதி இரவு வீட்டை சுற்றி வளைத்து பொலிஸார் சோதனையிட்டபோது, அந்த பெண் வீட்டை விட்டு வெளியே ஓடி காட்டுக்குள் மறைந்துள்ளார்.
அதன்படி, 25ஆம் திகதி காலை முதல் தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பெண்களிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.