கணவரால் கும்பமேளாவுக்கு வர முடியாத காரணத்தால் வீடியோ கால் செய்து செல்போனை தண்ணீரில் முக்கி எடுத்த மனைவி!

கணவரால் கும்பமேளாவுக்கு வர முடியாத காரணத்தால் அவருக்கு வீடியோ கால் செய்து செல்போனை தண்ணீரில் முக்கி எடுத்த மனைவியின் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் கடந்த மாதம் 13-ம் திகதி மகா கும்பமேளா தொடங்கி நடைபெற்று வருகிறது.

உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் மகா கும்பமேளாவுக்கு வருகை தருகின்றனர். இதுவரை 55 கோடிக்கும் அதிகமான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.

இதில், கும்பமேளாவுக்கு வர முடியாதவர்கள் அங்கிருந்து கொண்டு வரும் தண்ணீரைத் தெளித்து திருப்தி அடைகின்றனர்.

இந்நிலையில், பெண் ஒருவர் புனித நீராடுவதற்காக பிரயாக்ராஜ் சென்ற இடத்தில் தன் கணவருக்கு வீடியோ-கால் செய்து செல்போனை தண்ணீரால் நனைத்து முக்கி எடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

அதாவது, கும்பமேளாவுக்கு கணவரால் வர முடியாத காரணத்தால் இந்த பெண் அவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.