பிரபல பாடகர் யேசுதாஸ் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி !

பிரபல பாடகர் யேசுதாஸ் உடல்நலக்குறைவால் சென்னை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். யேசுதாஸ் நலமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ். இவருக்கு வயது 85. இவர் ஒரு படத்தில் பாடினார் என்றாலே அந்த படத்திற்கு தனி அந்தஸ்து கிடைத்து விடும். அந்த அளவிற்கு கிட்டத்தட்ட தனது காந்தக் குரலால் 80 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார்.

தனது காந்தக் குரலால் உலக அளவில் ரசிகர்களை யேசுதாஸ் கட்டிப்போட்டு உள்ளார். இந்நிலையில், இன்று வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ‘இவருக்கு ரத்த அணுக்கள் தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் நலமாக இருக்கிறார்’ என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.