அர்ஜுன் மகேந்திரனை இலங்கையிடம் ஒப்படைக்க முடியாது.. – சிங்கப்பூர் அறிவிப்பு..

மத்திய வங்கி பத்திர மோசடி தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாட்டிற்கு கொண்டு வரும் முயற்சி மீண்டும் தோல்வியடைந்துள்ளது.
அட்டர்னி ஜெனரல் திணைக்களம் மேற்கொண்ட முயற்சிக்கு பதிலளித்த சிங்கப்பூர் அதிகாரிகள், தங்கள் நாட்டின் சட்டத்தின்படி சிங்கப்பூர் குடிமகனை இலங்கைக்கு நாடு கடத்த முடியாது என்று கூறியுள்ளனர்.
பிறப்பால் இலங்கையராக இருந்தாலும், பின்னர் சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற அர்ஜுன் மகேந்திரன், நல்லாட்சி அரசாங்கத்தின் போது மத்திய வங்கியின் ஆளுநராக இருந்தார்.
பத்திர மோசடி காரணமாக இலங்கை அரசுக்கு 10 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாக அவரை இலங்கைக்கு கொண்டு வர அட்டர்னி ஜெனரல் திணைக்களம் முயற்சி செய்தும் சிங்கப்பூர் அதை நிராகரித்தது.