மோடியுடன் சொற்பொழிவிற்காக ரணில் இந்தியா செல்கிறார்.

முக்கியமான உலகளாவிய நிகழ்வுகள் தொடர்பான சொற்பொழிவிற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (27) இந்தியாவின் புது டெல்லிக்கு புறப்படுகிறார்.
சர்வதேச இராஜதந்திரிகளின் பங்கேற்புடன் நாளை (28) புது டெல்லியில் உள்ள பாரத மண்டபத்தில் இந்த சொற்பொழிவு நடைபெற உள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டோனி அபோட் ஆகியோரும் இங்கு உரையாற்ற உள்ளனர்.
ரணில் விக்ரமசிங்க குறுகிய காலத்தில் மூன்றாவது முறையாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். முன்னாள் ஜனாதிபதி மார்ச் 2ஆம் திகதி மீண்டும் இலங்கை திரும்ப உள்ளார்.