உஸ்வெட்டகேயிய கடற்கரையில் சுட்டுக் கொல்லப்பட்டவர் கொலை வழக்கில் மற்றொருவர் சந்தேகத்தின் பேரில் கைது!

பமுனுகம, உஸ்வெட்டகேயிய கடற்கரையில் சுட்டுக் கொல்லப்பட்டவர் கொலை வழக்கில் மற்றொருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (26) இரவு ராகம வல்பொல பகுதியில் பமுனுகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு இந்த கொலைக்கு சதி செய்ததற்காக இந்த சந்தேக நபரை 12 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கையெறி குண்டுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் ராகம, வல்பொல பகுதியைச் சேர்ந்த 29 வயது இளைஞர் என்றும் பமுனுகம பொலிஸார் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெப்ரவரி 21 ஆம் திகதி இரவு மோகன்வத்த கடற்கரையில் ஒருவர் முட்டிப்போட வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
இருப்பினும் ,பெப்ரவரி 25 ஆம் தேதி இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக ஏழு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.