சப்தம் படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம்.

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்பவர் ஆதி. தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சப்தம். இந்த படத்தை இயக்குனர் அறிவழகன் சப்தம். இருக்கிறார். ஏற்கனவே ஆதி நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் ஈரம் என்ற படம் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் லட்சுமிமேனன், சிம்ரன், லைலா, எம்.எஸ் பாஸ்கர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்திற்கு தமன் இசை அமைத்திருக்கிறார். பேய் கதைகளத்தை மையமாக வைத்து வெளியாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
படத்தில் ஹீரோ ஆதி மும்பையில் ஆவிகளை சப்தங்கள் மூலம் கண்டறியும் நிபுணராக இருக்கிறார். இதனால் தன்னிடம் வந்து குறை சொல்லும் ஒவ்வொருவரின் அமானுஷ்ய பிரச்சினைகளையெல்லாம் சரி சொல்லும் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் மூணாரில் மருத்துவ கல்லூரியில் மாணவிகள் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
அதற்குப்பின் ஆவிகள் இருக்கிறதா? வேறு ஏதாவது காரணமா? என்பதை தெரிந்து கொள்ள ஹீரோ ஆதியை அழைக்கிறார்கள். ஆதி கல்லூரிக்குள் வந்த பிறகு சப்தங்கள் மூலம் ஆவிகள் வந்த என்று சோதனை செய்கிறார். இருந்தும் அடுத்தடுத்து கொலைகள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. கடைசியில் கொலைகளுக்கு காரணம் என்ன? உண்மையிலேயே அதற்கு பின் இருப்பது அமானுஷ்யமா? அதை ஆதி கண்டுபிடித்தாரா? என்பது தான் படத்தின் மீதி கதை.
ஈரம் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் அறிவழகன்- நடிகர் ஆதி கூட்டணியில் வெளிவந்த சப்தம் படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றிருக்கிறது. அட்டகாசமான ஒரு தரமான படத்தை பெற்றிருக்கிறது. கொடுத்திருக்கிறார் என்று சொல்லலாம். ஆரம்பத்திலிருந்து இறுதிவரை மேக்கிங் சிறப்பாக இருக்கிறது. படம் முழுவதும் ஹீரோ சுமந்து சென்றார் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு ஆதியின் நடிப்பு அட்டகாசமாக இருந்திருக்கிறது.
இவரை அடுத்து படத்தில் வரும் மற்ற நடிகர்களுமே தங்களுக்கு கொடுத்த வேலை சிறப்பாக செய்திருக்கிறார்கள். சிம்ரன், லைலா, லக்ஷ்மி மேனன எல்லோருமே சிறப்பான வேலையை செய்திருக்கிறார்கள் மேனன தான் சொல்லணும். பேய் கதைகளுக்கெல்லாம் லாஜிக் தேவை இல்லை என்றாலும் நம்பும் படியாக கதைக்களத்தை இயக்குனர் காண்பித்து இருக்கிறார். ஆனால், உணர்வுபூர்வமான காட்சிகளில் இயக்குனர் கவனம் செலுத்தி இருக்கலாம்.
அதுதான் சரியாக பார்வையாளர்கள் மத்தியில் கடந்து செல்லவில்லை. தமனின் பின்னணி இசை படத்திற்கு பட்டையை கிளப்பி இருக்கிறது. படத்தின் தலைப்பிற்கு ஏற்ப சில இடங்கள் காது தலைப்பிற்கு அளவிற்கு சத்தமாக இருக்கிறது. அதை கொஞ்சம் குறைத்து இருக்கலாம். ஹாலிவுட் தரத்திற்கு படத்தின் மேக்கிங்கை இயக்குனர் கொண்டு சென்று இருப்பது பெரிய விஷயம். படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. ஆனால், இரண்டாம் பாதியில் தான் கொஞ்சம் சொதப்பல். மொத்தத்தில் எல்லோரும் ஒருமுறை சென்று பார்க்கும் படமாக தான் சப்தம் இருக்கிறது.
எமோஷனல் காட்சிகள் சரியாக செட் ஆகவில்லை. இரண்டாம் பாதியில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பை கொடுத்திருக்கலாம். கதைக்களம் கொண்டு சென்ற விதத்திலும் இயக்குனர் கவனம் செலுத்தி இருக்கலாம் சில இடங்களில் அதிகமான கவனம் ஏற்படுத்தி இருக்கிறது மொத்தத்தில் சப்தம் – புது முயற்சி.