ரஷ்ய-அமெரிக்க நல்லிணக்கத்தைக் குலைக்க முயல்வோரை எச்சரித்த அதிபர் புட்டின்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) தமது நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்படுவதைக் குலைக்க முயல்வோருக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அணுவாற்றல் வாய்ந்த இரு பெரும் நாடுகளுக்கு இடையே இதமான உறவு நீடிப்பதை எல்லா நாடுகளும் விரும்புவதில்லை என்றார் அவர்.

அமெரிக்க – ரஷ்ய பிரநிதிகள் துருக்கியேவில் சந்தித்த வேளையில் திரு. புட்டின் அவ்வாறு கூறினார்.

உக்ரேன் விவகாரம் பேசப்படவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.

மாறாக இருதரப்பு அம்சங்களில் கவனம் செலுத்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

வாஷிங்டனிலும் மாஸ்கோவிலும் தூதரகச் செயல்பாடுகள், ஊழியர்கள், விசா நடைமுறைகள் முதலிய அம்சங்கள் ஆராயப்பட்டன.

அமெரிக்க – ரஷ்ய அதிபர்கள் சென்ற மாதம் தொலைபேசியில் உரையாடினர். பிறகு சவுதி அரேபியாவில் இரு நாட்டு உயர் அதிகாரிகளின் சந்திப்பு நடந்தது. அடுத்து துருக்கியேவில்
இருதரப்புச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.