“L போர்டு நாடாளுமன்ற உறுப்பினராகும் எண்ணம் எனக்கு இல்லை : ரணில்

“எல் போர்டு வைத்திருப்பவர்களுடன் பெராரி ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் நேரத்தை செலவிட விரும்ப மாட்டார்கள்” என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வருவீர்களா என ஊடகங்கள் கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.
எல் போர்டு நாடாளுமன்ற உறுப்பினராகும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக் குழுவிற்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
திவால் நிலையில் இருந்தபோது நாட்டைப் பொறுப்பேற்று அந்த சவாலை வெற்றிகரமாக நிறைவேற்றியதில் தனக்கு அடக்கமான மகிழ்ச்சி இருப்பதாக விக்கிரமசிங்க கூறினார்.
மக்கள் நாட்டின் பொறுப்பை புதிய குழுவிடம் ஒப்படைத்துள்ளதாகவும், அவர்கள் அந்தப் பொறுப்பை அவர்கள் முறையாக நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.