1983 கலவரம்: மனோ கணேசன் பகிர்ந்த மறக்க முடியாத சம்பவம்.

1983 கலவரம்: மனோ கணேசன் பகிர்ந்த மறக்க முடியாத சம்பவம1983 ஜூலை கலவரத்தின் போது நீதி அமைச்சரின் தந்தை தங்களையும் குடும்பத்தையும் காப்பாற்றிய உணர்ச்சிகரமான கடந்த கால கதையை நாடாளுமன்றத்தில் கூறிய மனோ கணேசன் .
நாடாளுமன்ற விவாதத்தின் போது மனோ கணேசன் எம்.பி மிகவும் உணர்ச்சிகரமான கதையொன்றைக் கூறினார்.
அந்த கதையின் ஆரம்பம் 1983 வரை செல்கிறது. அந்த நேரத்தில் மனோ கணேசன் எம்.பியும் ஒரு இளம் இளைஞராக இருந்தார்.
இன்றைய நீதி அமைச்சர் ஹர்ஷண நானாயக்காரவின் தந்தை மூத்த கலைஞர் யசபாலித்த நானாயக்கார. ஹர்ஷணின் தந்தை யசபாலித்த, மனோ கணேசனையும் அவரது தாய், தந்தை, சகோதர சகோதரிகள் உட்பட குடும்பத்தில் உள்ள அனைவரையும் மரணத்திலிருந்து காப்பாற்றிய விதம் குறித்து மனோ கணேசன் நேற்று கூறினார்.
மனோ கணேசன் அந்தக் கதையைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, அவருக்குப் பின்னால் இருந்த சுஜீவ சேனசிங்காவின் வாயை திறந்து திடுக்கிட்ட காட்சி தொலைக்காட்சி திரையில் காட்டப்பட்டது.
மனோ கணேசன் எம்.பி. கூறியதைப் போலவே கதை இதுதான்.
“உங்கள் தந்தை யசபாலித்த நானாயக்கார. அவர் அதிகாரப் பகிர்வுக்காக நின்றவர். விஜய குமாரதுங்கவுடன் இருந்தார். ஒரு கலைஞர் மட்டுமல்ல, ஒரு நல்ல அரசியல்வாதி. மாகாண சபையிலும் இருந்தார். அது எனக்குத் தெரியும்.”
“நான் உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன்.”
“நான் மதிக்கிற தலைவர் விஜய குமாரதுங்க. அந்த நேரத்தில் அதிகாரப் பகிர்வுக்காக நின்றவர் விஜய குமாரதுங்க. அது மட்டுமல்ல, தெற்கிலிருந்து வடக்கு சென்றார். ஜே.ஆர். ஜெயவர்தன ஜனாதிபதியாக இருந்தபோது, வடக்கு சென்று எல்.ரீ.ரீ.ஈ அமைப்போடு பேசி, நாட்டில் போர் நடந்த நேரத்தில் இனங்களுக்கிடையில் ஒற்றுமை இருக்க வேண்டும் என்றார். அவர் பயப்படாமல் அதைப் பற்றி பேசினார். ஆனால் 1988 இல் அவர் கொல்லப்பட்டார்.
யார்?. நீங்கள் (ஜனதா விமுக்தி பெரமுன) ……”
“1983 இல் ஹவ்லொக் கார்டனில் எங்கள் வீடு இருந்தது. அந்த நேரத்தில்… கலவரத்தின் போது என் வீடு எரிக்கப்பட்டது. எங்கள் வாகனங்கள் எரிக்கப்பட்டன. எங்கள் உறவினர்கள் கொல்லப்பட்டனர். எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. அப்படிப்பட்ட பட்டியலில் எங்கள் பெயர்கள் இல்லை.”
“அப்படிப்பட்ட தொந்தரவான நேரத்தில் ஹவ்லொக் கார்டன் வீட்டில் தீ வைப்பதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த நேரத்தில் மொபைல் போன்கள் இல்லை. வந்த அழைப்பில் விஜய குமாரதுங்க பேசினார். அவர் என் தந்தையின் நண்பர்.”
“பேசி ஐந்து நிமிடங்களில் ஒருவர் வந்தார். வந்து அவரது வாகனத்தில் என்னையும் என் அம்மாவையும் அப்பாவையும் என் சகோதரர்கள் அனைவரையும் அழைத்துச் சென்றார்.”
“அவர் யார். அவரது பெயர் யசபாலித்த நானாயக்கார.
உங்கள் அப்பா. அவ்வளவுதான் நடந்தது. அப்படிதான் செய்தார். அழைத்துச் சென்றார். காப்பாற்றினார்.”
“நாங்கள் சென்ற உடனேயே ஒரு குழு வந்தது. வந்து வீடுகளை எரித்தது. எங்களை கொல்லத்தான் வந்தார்கள். உங்கள் அப்பா எங்களை காப்பாற்றி அழைத்துச் சென்றார்.”
“அதனால் அமைச்சர் அவர்களே, நீங்கள் இந்த அதிகாரப் பகிர்வை செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன். பிரிக்கப்படாத இலங்கையில் ஒற்றுமையான இலங்கையில் அதிகாரப் பகிர்வு எங்கள் எதிர்பார்ப்பு. அந்த பொறுப்பு உங்களுக்கு உள்ளது. அதை செய்யுங்கள்.”