ரணிலின் தொலைநோக்குப் பார்வையை பாராட்டிய மோடி !

இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வையை தான் பாராட்டுவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெறும் “NXT Conclave 2025” மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியா சென்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த இந்திய பிரதமர், இது குறித்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“என் நண்பர் ரணில் விக்கிரமசிங்கவை NXT மாநாட்டில் சந்தித்தேன். நாங்கள் மேற்கொண்ட உரையாடல்களை நான் எப்போதும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். பல்வேறு பிரச்சினைகள் குறித்த அவரது தொலைநோக்கு பார்வையை நான் பாராட்டுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.