கீத் நோயர் கடத்தல்; இரண்டு முன்னாள் புலனாய்வு அதிகாரிகள் கைது

ஊடகவியலாளர் கீத் நோயர் கடத்தப்பட்டு, படுகாயமடைந்த சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (01) குற்றப் புலனாய்வுத் துறையின் அதிகாரிகள் இந்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 42 மற்றும் 46 வயதுடையவர்கள் என்றும், நவகத்தேகம மற்றும் உலுக்குளம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், இராணுவ புலனாய்வுப் பிரிவில் பணியாற்றிய இரண்டு ஓய்வு பெற்ற இராணுவத்தினர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பத்திரிகை ஆசிரியராக பணியாற்றி வந்த ஊடகவியலாளர் கீத் நோயர் 2008 மே மாதம் கடத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே இராணுவ உறுப்பினர்கள் உட்பட பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.