இலோன் மஸ்க்கிற்கு எதிராகப் போராட்டம்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் Tesla கார்க் கண்காட்சி அறைக்கு வெளியே நடத்தப்பட்ட பேரணியில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜக்சன்வில், புளோரிடா, டக்சன், அரிஸோனா (Jacksonville, Florida, Tucson, Arizona) உள்ளிட்ட நகரங்களில் உள்ள Tesla மின்சாரக் கார் கடைகளுக்கு வெளியே பலர் பேரணி நடத்தினர்.
அதனால் சாலைப் போக்குவரத்து தடைப்பட்டது.
அமெரிக்காவில் சர்வதிகாரிகளுக்கு இடமில்லை எனக் கூறும் பதாகைகளை அவர்கள் ஏந்தினர்.